சினிமா
மீரா மிதுன்

திரிஷாவை தொடர்ந்து ரஜினி, விஜய்யை வம்புக்கு இழுத்த மீரா மிதுன்

Published On 2020-07-15 11:58 GMT   |   Update On 2020-07-15 11:58 GMT
நடிகை திரிஷாவை தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் விஜய்யை பற்றி பதிவு செய்து நடிகை மீரா மிதுன் வம்பிழுத்திருக்கிறார்.
தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து பதிவு செய்திருந்தார்.

தற்போது நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை வம்பிழுத்து டிவீட் செய்துள்ளார் மீரா மிதுன். அதில், தமிழ்நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பத்திரமாக இருங்கள். நான் நல்ல சொகுசான இடத்தில் பாதுகாப்பாக தான் இருக்கிறேன். கன்னடர் ரஜினிகாந்த் மற்றும் கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்?! சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், என புலம்பியுள்ளார் மீரா மிதுன்.



இதைப்பார்த்த ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News