சினிமா
நடிகர் ரஜினிகாந்த்

ரஜினி சொன்னதை பின்பற்றி வரும் மாஸ்டர் பட நடிகை

Published On 2020-07-02 13:01 GMT   |   Update On 2020-07-02 13:01 GMT
நடிகர் ரஜினிகாந்த் சொன்னதை தொடர்ந்து பின்பற்றி வருவதாக மாஸ்டர் பட நடிகை பேட்டி அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 இந்த நிலையில் சமீபத்தில் மாளவிகா அளித்த பேட்டியில் ’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியுடன் நிறைய நேரம் செலவிட முடிந்ததாகவும், அவர் ஆன்மீகம் பற்றி கூறியதை அறிந்து கொள்ள முடிந்ததாகவும் கூறியுள்ளார்.  



உடலையும் மனதையும் திடமாக வைத்துக்கொள்ள யோகா செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து ரஜினி தன்னிடம் கூறியதாகவும் குறிப்பாக கிரியா யோகாவின் முக்கியத்துவம் பற்றி அவர் கூறியதை தான் இப்பொழுதும் பின்பற்றி வருவதாகவும் மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News