அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் கொரியன் படமான 'பாராசைட்' நான்கு விருதுகளை அள்ளியது.
ஆஸ்கர் 2020 - 4 விருதுகளை அள்ளியது பாராசைட்
பதிவு: பிப்ரவரி 10, 2020 10:30
ஆஸ்கர் விருதுடன் பாராசைட் பட இயக்குனர் போங் ஜூன் ஹோ
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.
இதில் போங் ஜுன் ஹோ இயக்கிய பாராசைட் திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளில் பாராசைட் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. ஆங்கில மொழி அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையை கொரியன் படமான ’பாராசைட்’ பெற்றுள்ளது.
Related Tags :