சினிமா
அடுத்த சாட்டைக்கு தயாரான சமுத்திரகனி
சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு’அடுத்த சாட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். #Samuthirakani #AduthaSaattai
சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாட்டை’. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான புரிதலை இப்படத்தில் சிறப்பாக காண்பித்திருந்தார்கள். மேலும் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் கூறியிருந்தார்கள்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதற்கு ‘அடுத்த சாட்டை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் சமுத்திரகனி, யுவன், கன்னிகா ரவி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.
சமுத்திரகனி நடிப்பில் தற்போது ‘நாடோடிகள் 2’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல், அப்பா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.