சினிமா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இந்தி நடிகர் திலீப்குமார்

Published On 2018-10-12 09:08 IST   |   Update On 2018-10-12 09:08:00 IST
நிமோனியா காய்ச்சலால் மும்பை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் திலீப்குமார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வீடு திரும்பினார். #DileepKumar
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாருக்கு வயது முதிர்வின் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. 95 வயதான அவர் கடந்த மாதம் நிமோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் மீண்டும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானதாக தகவல்கள் வெளியாயின. எனினும் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக அவர் உடல் நலம் தேறினார்.



இதையடுத்து திலீப்குமார் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீடு திரும்பிய அவர் நலமுடன் உள்ளதாகஅவரது நண்பர் பைசல் பாருக்கி தெரிவித்தார். #DilipKumar

Tags:    

Similar News