சினிமா

பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி

Published On 2018-06-14 12:39 IST   |   Update On 2018-06-14 12:39:00 IST
டி.வி. நிகழ்ச்சி மூலம் பிரபலமான அக்‌ஷரா ரெட்டி, புதிய படம் மூலம் பெரிய திரையில் ரசிகர்களை கவர இருக்கிறார். #AksharaReddy
‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான அக்‌‌ஷரா ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். அவரிடம் இதுபற்றி பேசியபோது ’அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி.

நம் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயில் நாம் வாழ வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். என் அர்ப்பணிப்பை பார்த்து "மகாலட்சுமி" விருதை எனக்கு கொடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவம். மாடலிங் பெண்களும் கிராமத்திற்கு சென்று வாழ முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த நிகழ்ச்சி. நான் பொதுவாக உடற்பயிற்சியின் மீது பெரும் காதல் கொண்டவள்.

தினமும் இரண்டு மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் அந்த நிகழ்ச்சியை எளிமையாக கடக்க முடிந்தது. நான் ஜார்ஜியா பல்கலை கழகத்தில் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவள். மாதுரி தீட்சித், ஜுகி சாவ்லா போன்ற பிரபல நடிகைகளுடன் ராம்ப் வாக் சென்று இருக்கிறேன்.



தென் இந்திய அளவில் பல அழகி போட்டிகளுக்கு நடுவராகவும் முன்னணி நிறுவனங்களின் விளம்பர மாடலாகவும் இருந்து இருக்கிறேன். சபதம் விஷன்ஸ் சார்பாக, பிரான்ஸிஸ் செல்வம் இயக்கும் படத்தில் விஜீத் ஜோடியாக தமிழ் மற்றும் மலேசிய படத்தில் அறிமுகமாகிறார். 

ஜக்குபாய் படத்திற்கு இசையமைத்த ரபீக் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் மொரீஷியஸ் மற்றும் மலேசியாவில் தயாராகிறது. முதல் முறையாக தமிழ் படத்தின் படப்பிடிப்பை மொரீஷியஸ் அதிபர் பெர்லன் வையாபுரி தொடங்கி வைத்த முதல் சினிமா இதுதான்.
Tags:    

Similar News