இது புதுசு
விட்டாரா பிரெஸ்ஸா

மேம்பட்ட மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2022-06-03 06:44 GMT   |   Update On 2022-06-06 09:51 GMT
மாருதி சுசுகி நிறுவனம் புதிய மேம்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் டாடா நெக்சான், நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.


மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலை ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து உள்ளது. எர்டிகா மற்றும் XL6 பேஸ்லிப்ட் மாடல்களை தொடர்ந்து மாருதி சுசுகி அறிமுகம் செய்யும் மூன்றாவது பெரிய மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா அமைந்துள்ளது. 

இந்திய சந்தையில் 2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் டாடா நெக்சான், நிசான் மேக்னைட், மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக விட்டாரா பிரெஸ்ஸா இருக்கிறது. மற்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது இந்த காம்பேக்ட் எஸ்.யு,வி. மாடல் அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கிறது.



புதிய விட்டாரா பிரெஸ்ஸா பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற கேபினில் அதிகளவு மாற்றங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த காரின் முன்புற கிரில் மாற்றப்பட்டு, அதிக கூர்மையாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் க்ரிஸ்ப் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன. காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மாற்றப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இவை காருக்கு அதிக பிரீமியம் தோற்றத்தை வழங்கும்.

காரின் உள்புறத்திலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் டேஷ்போர்டு மற்றும் ஓட்டுமொத்த லே-அவுட் மாற்றப்பட்டு, பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படலாம். இதில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், HUD டிஸ்ப்ளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News