ஆட்டோமொபைல்
ஆடி இ டிரான்

ஆடி இ டிரான் ஜிடி வெளியீட்டு விவரம்

Published On 2021-02-05 11:00 GMT   |   Update On 2021-02-05 11:00 GMT
ஆடி நிறுவனத்தின் இ டிரான் ஜிடி மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான ஆடி புதிய இ டிரான் ஜிடி மாடலை பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த கார் ஆர்க்டிக் பகுதியில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. 

அதிநவீன ஸ்டைலிங் மட்டுமின்றி புதிய ஆடி இ டிரான் மேம்படுத்த பாதுகாப்பு அம்ங்களான அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மாணிட்டரிங், லேண் கீப் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜன்சி பிரேக்கிங் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.



இதுதவிர முதற்கட்டமாக ஸ்டான்டர்டு மாடலும் பின் ஆர்எஸ் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆடி இ டிரான் ஜிடி மாடல் 582 பிஹெச்பி திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும்.

இதன் ஆர்எஸ் வெர்ஷன் 628 பிஹெச்பி பவர் வழங்கும் என்றும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.0 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 401 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது. 

இதில் வழங்கப்படும் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே ஆகும் என கூறப்படுகிறது. இந்த கார் உள்புறம் பிரீமியம் இருக்கை, பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News