ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எர்டிகா

மாருதி சுசுகி எர்டிகா பி.எஸ். 6 இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-07-31 08:09 GMT   |   Update On 2019-07-31 08:09 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் எர்டிகா பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.



மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகள் ஏப்ரல் 1, 2020 முதல் அமலாகிறது. இதன்காரணமாக மாருதி சுசுகி தனது ஆல்டோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் போன்ற கார்களை ஏற்கனவே பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்துவிட்டது.

அந்த வரிசையில் தற்சமயம் பி.எஸ். 6 எர்டிகா எம்.பி.வி. கார் இணைந்துள்ளது. மாருதி எர்டிகா பி.எஸ். 6 மாடல் துவக்க விலை ரூ. 7.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



மாருதி சுசுகி எர்டிகா பி.எஸ். மாடலிலும் 1.5 லிட்டர் K15 சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் மாருதி சுசுகியின் SHVS மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டெர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது.

பி.எஸ். 6 அப்டேட் தவிர எர்டிகா காரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஃபேக்ட்ரி-ஃபிட் செய்யப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட முதல் எம்.பி.வி. கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 8.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் ஆறு பேர் பயணிக்கக்கூடிய எம்.பி.வி. கார் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் XL6 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதன் விற்பனை ஆக்ஸ்ட் 21 ஆம் தேதி துவங்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News