ஆட்டோமொபைல்
பொலிரோ பவர் பிளஸ்

விரைவில் இந்தியா வரும் பி.எஸ். 6 பொலிரோ பவர் பிளஸ்

Published On 2019-07-27 10:32 GMT   |   Update On 2019-07-27 10:32 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பி.எஸ். 6 பொலிரோ பவர் பிளஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ பவர் பிளஸ் மாடல் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் தயாராகிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய கார் பி.எஸ். 6 தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கும் சர்வதேச ஆட்டோமோடிவ் தொழில்நுட்ப மையத்தின் சான்றை பெற்றிருக்கிறது.

பி.எஸ். 6 பொலிரோ பவர் பிளஸ் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பாபர்க்கப்படுகிறது. பொலிரோ எஸ்.யு.வி. தவிர மஹிந்திராவின் மற்ற மாடல்களுக்கும் பி.எஸ். 6 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. பொலிரோ பவர் பிளஸ் மாடலில் பி.எஸ். 6 மட்டுமின்றி இதர பாதுகாப்பு உபகரணங்கள் பற்றியும் மஹிந்திரா அறிவித்துள்ளது.

அந்த வகையில் பி.எஸ். 6 பொலிரோ பவர் பிளஸ் மாடலில் ஏர்பேக், ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், சீட்பெல்ட் ரிமைன்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களுக்கு மேனுவல் ஒவர்ரைடு வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஏ.பி.எஸ்., ஆண்டி-கிளேர் IRVM, டிஜிட்டல் இம்மொபைலைசர், முன்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.



சமீபத்தில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட பொலிரோ பவர் பிளஸ் கார் இந்தியாவில் ரூ. 7.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பொலிரோ பவர் பிளஸ் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர் 195 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

பொலிரோ ஸ்டான்டர்டு மாடலில் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 63 பி.ஹெச்.பி. பவர், 195 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News