ஆட்டோமொபைல்
கியா கார்னிவல்

கியா கார்னிவல் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-07-23 10:06 GMT   |   Update On 2019-07-23 10:06 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் எம்.பி.வி. கார் அறிமுக விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் காரான செல்டோஸ் மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய செல்டோஸ் கார் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. கியா மோட்டார்ஸ் தனது கார்னிவல் எம்.பி.வி. கார் இந்தியாவில் தனது இரண்டாவது மாடலாக அறிமுகமாகும் என சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. காரை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர தற்சமயம் விற்பனை செய்யப்படும் காரில் பல்வேறு அப்டேட்களை செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கார்னிவல் எம்.பி.வி. கார் தற்போதைய மாடலின் ஃபேஸ்லிஃப்ட் கார் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக கார்னிவல் கார் 2015 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டது. இதன்காரணமாக புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படலாம்.



இத்துடன் கார்னிவல் எம்.பி.வி. இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கியா கார்னிவல் காரில் 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக்கல் பவர் ஸ்லைடிங் ரியர் டோர், எல்.இ.டி. லைட்டிங், தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

இந்த கார் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இது 202 பி.ஹெச்.பி. @3800 ஆர்.பி.எம். மற்றும் 441 என்.எம். டார்க் @1750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News