ஆட்டோமொபைல்
2019 மெர்சிடஸ் ஏ.எம்.ஜி. ஏ45

மெர்சிடஸ் 2019 ஏ.எம்.ஜி. ஏ45 அறிமுகம்

Published On 2019-07-21 09:44 GMT   |   Update On 2019-07-21 09:44 GMT
சொகுசு கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான மெர்சிடிஸ் 2019 ஏ.எம்.ஜி. ஏ45 காரை அறிமுகம் செய்துள்ளது.



சொகுசு மாடல் கார்கள் என்றவுடன் நினைவுக்கு வரும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிரபல மாடலில் 2019 ஏ.எம்.ஜி. ஏ 45 வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் ஏ45.எஸ் மாடலும் அறிமுகமாகியுள்ளது. 

ஹேட்ச்பேக் மாடலாக இவை வெளிவந்துள்ளன. இதில் வழக்கமான நான்கு சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 387 பி.ஹெச்.பி. திறனை 6,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 480 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,000 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 



புதிய ஏ.எம்.ஜி. ஏ45 கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4 வினாடிகளில் தொட்டு விட முடியும். அந்த அளவுக்கு வேகமானது. மற்றொரு மாடலான ஏ45.எஸ் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 வினாடிகளில் தொட்டுவிடும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. 

இந்த காரில் 8 ஸ்பீடு டியூயல் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6 வகையான டிரைவிங் மோட்: கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், ஸ்லிப்பரி, தனி நபர் மற்றும் பந்தயம் உள்ளிட்டவை உள்ளன. இந்த இரண்டு புதிய மாடல்களும் விரைவில் விற்பனைக்கு வரும் என மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News