ஆட்டோமொபைல்
ஹோன்டா X ADV 150

ஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2019-07-20 10:58 GMT   |   Update On 2019-07-20 10:58 GMT
ஹோன்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் ஸ்கூட்டர் இந்தோனேசிய ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



ஹோன்டா நிறுவனம் 150சிசி திறன் கொண்ட ஹோன்டா X-ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் மாடலை கைகின்டோ இந்தோனேசிய ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தியது. X-ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் ஹோன்டா X-ADV 750 போன்று காட்சியளிக்கிறது.

புதிய ஸ்கூட்டரில் 149.3சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.2 பி.ஹெச்.பி. பவர் @8500 ஆர்.பி.எம்., 13.8 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் வழக்கமான வி-மேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 46 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோன்டா X-ADV 150 1950 எம்.எம். நீளம், 763எம்.எம். அகலம், 1153எம்.எம். உயரமாக இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165எம்.எம். ஆகும். இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின்-கேஸ் சார்ஜ் ஷோவா ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் 240 எம்.எம். பெட்டல் டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் வழங்கப்படுகிறது.



ஸ்கூட்டரில் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பேட்டரி, எரிபொருள் பயன்பாட்டு விவரம், ஆயில் மாற்றக் கோரும் இன்டிகேட்டர், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது. இத்துடன் சார்ஜிங் சாக்கெட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இந்த ஸ்கூட்டர்: ஏ.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். ஸ்டார்ட்-ஸ்டாப் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே Rp 3.65 கோடி (இந்திய மதிப்பில் ரூ. 1.80 லட்சம்), Rp 3.35 கோடி (இந்திய மதிப்பில் ரூ. 1.65 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News