ஆட்டோமொபைல்
டேட்சன் ரெடிகோ

மேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-07-19 10:12 GMT   |   Update On 2019-07-19 10:12 GMT
டேட்சன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



டேட்சன் ரெடிகோ கார் AIS-145 பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய காரில் டிரைவர் சைடு ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், சீட்-பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக ரெடிகோ காரில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. வசதிகள் சேர்க்கப்பட்டன. தற்சமயம் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இதன் விலை முந்தைய மாடலை விட ரூ. 12,000 வரை அதிகமாகி இருக்கிறது. இதன் டாப்-எண்ட் மாடல் முந்தைய மாடலை விட ரூ. 4000 அதிகம் ஆகும்.



இந்தியாவில் ரெடிகோ மாடல்கள் ரூ. 2.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி ரூ. 4.37 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய ரெடிகோ காரிலும் 54 பெச்.பி. பவர், 0.8 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 68 ஹெச்.பி.  பவர் வழங்கும் 1.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் வசதியுடன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News