ஆட்டோமொபைல்
பலேனோ ஆர்.எஸ்.

டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா? அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி

Published On 2019-07-18 10:59 GMT   |   Update On 2019-07-18 10:59 GMT
மாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகள் அமலானதும் டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக தனது வாகனங்களில் இந்த என்ஜின்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



மாருதி சுசுகி நிறுவனம் 2020 ஏப்ரல் மாதத்திற்கு பின் டீசல் என்ஜின் வாகனங்களை வெளியிடுவதை நிறுத்துகிறது. பி.எஸ். 6 புகை விதிகள் ஏப்ரல் 1, 2020 முதல் அமலாக இருப்பதால், மாருதி சுசுகி இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

பி.எஸ். 6 புகை விதிகள் அமலானதும் மாருதி சுசுகி தனது வாகனங்களில் டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் விற்பனையாகும் மாருதி சுசுகி கார்களில் பலேனோ மாடலில் மட்டுமே டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த என்ஜின் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் யூனிட் ஆகும். இதனை மாருதி சுசுகி பூஸ்டர்ஜெட் என அழைக்கிறது. இந்த என்ஜின் 101 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது பலேனோ ஆர்.எஸ். மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் டர்போசார்ஜிங் மற்றும் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எரிபொருள் சேமிப்பு மற்றும் செயல்திறனை குறையவிடாமல் பார்த்துக் கொள்ளும். ஏப்ரல் 2020-க்கு பின் மாருதி ஸ்விஃப்ட், இக்னிஸ், பலேனோ ஸ்டான்டர்டு வெர்ஷன், டிசையர், பிரெஸ்ஸா போன்ற மாடல்களில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பூஸ்டர்ஜெட் என்ஜின் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News