ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எர்டிகா

மாருதி சுசுகியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்

Published On 2019-07-16 10:14 GMT   |   Update On 2019-07-16 10:14 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் வேகன் ஆர் மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக ஏற்கனவே அந்நிறுவனம் அறிவித்துவிட்டது.

இந்நிலையில், அந்நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் மாருதி சுசுகியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் எர்டிகா எம்.பி.வி. மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், புதிய எர்டிகா எலெக்ட்ரிக் மாடல் முற்றிலும் புதிய கோணங்களில், வித்தியாச வடிவமைப்பு மற்றும் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரண்டாவது எலெக்ட்ரிக் காருக்கான திட்டத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் மாருதி சுசுகி ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.



மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் தீவிர சோதனை செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இந்த எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யப்படுகிறது. இதற்கென 50 ப்ரோடோடைப் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதோடு மாருதி சுசுகி லித்தியம் அயன் பேட்டரி தயாரிக்கும் ஆலையை குஜராத் மாநிலத்தில் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுசகி தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி செய்யும் ஆலையை கட்டமைப்பதாக தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News