ஆட்டோமொபைல்
பென்ட்லி எக்ஸ்ப் 100 ஜி.டி.

பென்ட்லி எதிர்கால திட்டங்களை பறைசாற்றும் கான்செப்ட் கார் அறிமுகம்

Published On 2019-07-13 09:43 GMT   |   Update On 2019-07-13 09:43 GMT
பென்ட்லி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை பறைசாற்றும் புதிய கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



பென்ட்லி நிறுவனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்நிறுவனம் எக்ஸ்ப் 100 ஜி.டி. கான்செப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.

புதிய கான்செப்ட் கார் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தானியங்கி செயல்பாடு, உள்புறம் சிறப்பு சென்ட்கள், மரங்களில் இருந்து இயற்கையாக விழுந்த மரக்கட்டைகளால் செய்யப்பட்டுள்ளன. இதன் இருக்கைகள் விசேஷ பொருட்களால் செய்யப்பட்டுள்ளது.




பென்ட்லி எக்ஸ்ப் 100 ஜி.டி. மாடலில் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இது ஒற்றை க்ளிக்கில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த காரில் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்கள், ஓட்டுனரின் மனநிலையை அறிந்து கொள்ளும் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் டிரைவ் ஸ்டைல், உள்புற லைட்டிங், சவுண்ட் அளவுகள் மற்றும் நறுமனம் உள்ளிட்டவற்றை தானாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்.



பென்ட்லி எக்ஸ்ப் 100 ஜி.டி. காரில் இதுவரை இல்லாதளவு பெரிய சில்வர் மேட்ரிக்ஸ் கிரில், பென்ட்லியின் வட்ட வடிவம் கொண்ட டைமன்ட் கட் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முப்பறிமான ஹார்ஸ்-ஷூ வடிவம் கொண்ட OLED டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News