ஆட்டோமொபைல்
பி.எம்.டபுள்யூ. விஷன் டி.சி. ரோட்ஸ்டர்

பி.எம்.டபுள்யூ. பேட்டரி பைக் கான்செப்ட் அறிமுகம்

Published On 2019-07-07 10:40 GMT   |   Update On 2019-07-07 10:40 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனம் விஷன் டி.சி. ரோட்ஸ்டர் என்ற பெயரில் புதிதாக பேட்டரி மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
 


ஆட்டோமொபைல் துறையின் பிரபல நிறுவனமான பி.எம்.டபுள்யூ. பேட்டரி மோட்டார்சைக்கிளை உருவாக்கியுள்ளது. எதிர்கால பேட்டரி மோட்டார்சைக்கிள் எப்படி இருக்கும் என்ற முன்னோக்கிய சிந்தனையின் வடிவமைப்பில் உருவானதுதான் இந்த மோட்டார்சைக்கிள். விஷன் டி.சி. ரோட்ஸ்டர் என்ற பெயரில் 25 பேட்டரி மோட்டார்சைக்கிளை உருவாக்க பி.எம்.டபுள்யூ. திட்டமிட்டுள்ளது.

இவற்றை 2025-ம் ஆண்டில் விற்பனைக்கு விடப் போவதாக அறிவித்திருந்த இந்நிறுவனம், தற்போது இரண்டு ஆண்டுகள் முன்பாகவே விற்பனைக்கு விட முடிவு செய்துள்ளது. படத்தில் காணப்படும் இந்த மோட்டார் சைக்கிள் முழுவதும் பேட்டரியால் ஓடக் கூடியது. 90 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனம் வடிவமைத்த 2 சிலிண்டர் பாக்ஸர் மோட்டார்சைக்கிளுக்கான வடிவமைப்பை போன்று இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. 



பேட்டரியின் கீழ் பகுதியில் சிலிண்டர் வடிவிலான எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் டியூபுலர் ஃபிரேமை கொண்டுள்ளது. பேட்டரி வாகனத்தின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதால் இந்த ஃபிரேம்கள் அலுமினியத்தால் ஆனவை. இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கை மற்றும் என்ஜின் வெப்பமடைவதை குளிர்விக்கும் கூலன்ட் ஆகியன மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ள பகுதியில் பொருந்திஉள்ளன.

இதில் டியூலீவர் போர்க் முன்பகுதியில் உள்ளது. பேட்டரியில் இது இயங்கினாலும் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையான டார்க் இழுவிசையுடன் சீறிப்பாயும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபுள்யூ. பேட்டரி வாகனமும் நிறுவனத்தின் பெயரை பறைசாற்றும் என்பது அதன் வடிவமைப்பு, செயல்திறனிலேயே புரிகிறது.
Tags:    

Similar News