ஆட்டோமொபைல்
பெனெலி லியோன்சினோ

ஒற்றை வேரியண்ட்டில் இந்தியா வரும் பெனெலி லியோன்சினோ

Published On 2019-06-29 09:52 GMT   |   Update On 2019-06-29 09:52 GMT
பெனெலி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் லியோன்சினோ மோட்டார்சைக்கிள் இந்திய மாடல் ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகமாகும் என தெரிகிறது.



பெனெலி நிறுவனத்தி்ன் லியோன்சினோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமாக இருந்தது. எனினும், இந்த மோட்டார்சைக்கிள் திட்டமிட்டப்டி அறிமுகம் செய்யப்படவில்லை. 

இந்நிலையில், பெனெலி நிறுவனம் தனது லியோன்சினோ மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகமாகும் என கூறப்படுகிறது.



சர்வதேச சந்தையில் லியோன்சினோ: ஸ்டான்டர்டு, டிரெயில் மற்றும் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. லியோன்சினோ 500 மாடலில் டியூபுலார் ஸ்டீல்-டிரெலிஸ் ஃபிரேம் பயன்படுத்துகிறது. இதில் 17-இன்ச் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. இதில் 50 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்படுகிறது.

மோட்டார்சைக்கிளின் முன்புறம் 320 எம்.எம். ட்வின்-டிஸ்க் செட்டப், பின்புறம் 260 எம்.எம். டிஸ்க் மற்றும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது. லியோன்சினோ 500 மாடலில் 499.6சிசி, லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் பேரலெல் ட்வின் என்ஜின் கொண்டிருக்கிறது.

இந்த என்ஜின் 47.6 பி.ஹெச்.பி @8500 ஆர்.பி.எம். மற்றும் 45 என்.எம். @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் பெனெலி லியோன்சினோ ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 5.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News