ஆட்டோமொபைல்

உலகின் பாதுகாப்பான மோட்டார்சைக்கிள்

Published On 2019-06-19 11:16 GMT   |   Update On 2019-06-19 11:16 GMT
கனடா நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான டேமான் புதிதாக டேமான் எக்ஸ் எனும் ப்ரோடோடைப் மாடலை உருவாக்கி வருகிறது.
 


கனடா நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான டேமான் ப்ரோடோடைப் மோட்டார்சைக்கிள் மாடல் ஒன்றை உருவாக்கி வருகிறது. டேமான் எக்ஸ் என அழைக்கப்படும் புதிய மோட்டார்சைக்கிள் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என டேமான் தெரிவித்துள்ளது.

வேரியபிள் ரைடிங் பொசிஷன் மற்றும் மேம்பட்ட டிராஃபிக் டிராக்கிங் கொலிஷன் வார்னிங் சிஸ்டம் என இரண்டு புதிய தொழில்நுட்பங்களை டேமான் தனது புதிய மோட்டார்சைக்கிளில் வழங்க இருக்கிறது. இதில் வேரியபிள் டைரிங் பொசிஷன் கொண்டு பயனர்கள் ரைடிங் பொசிஷன்களை அட்ஜஸ்ட் செய்ய அனுமதிக்கிறது.

இத்துடன் பயனர்கள் இருக்கை, கால் வைக்கும் இடம், க்ளிப் ஆன் ஹேன்டிள் பார் உள்ளிட்டவற்றை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. டேமான் நிறுவனம் அட்வான்ஸ் வார்னிங் சிஸ்டம் (AWSM) எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. இது பல்வேறு ரேடார்கள், கேமராக்கள் மற்றும் சென்சார்களை பயன்படுத்தி மோட்டார்சைக்கிள் நகரும் போதே அருகில் இருக்கும் 64 பொருட்களை டிராக் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.



ஏதேனும் ஆபத்தை சென்சார் உணரும் பட்சத்தில், இது வாகனத்தை ஓட்டுபவருக்கு எச்சரிக்கை செய்யும். வார்னிங் சிக்னல்கள் எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள் ஆகும். இவை மோட்டார்சைக்கிளின் காக்பிட் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. இதுதவிர வைப்ரேஷன் யூனிட் ஒன்று ஹேண்டிள்பார் க்ரிப் மற்றும் சீட்களில் பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிளின் பாதுகாப்பு அமைப்பு 5ஜி கனெக்ஷன்களால் ஆன்போர்டு கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்படுகிறது. ப்ரோடோடைப் மோட்டார்சைக்கிள் உருவாக்கும் பணிகள் நிறைவுற்று சோதனைகள் துவங்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கவும் டேமான் திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News