ஆட்டோமொபைல்

இந்தியாவில் மஹிந்திரா தார் 700 அறிமுகம்

Published On 2019-06-18 05:57 GMT   |   Update On 2019-06-18 05:57 GMT
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தார் 700 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்.யு.வி. முழு விவரங்களை பார்ப்போம்.



மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் புதிய ஆஃப் ரோடு எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார் தார் 700 பிராண்டிங் கொண்டிருக்கிறது. புதிய எஸ்.யு.வி. மாடலில் பல்வேறு பிரத்யேக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய தார் 700 விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மஹிந்திராவின் முதல் வாகனம் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை பரைசாற்றும் விதமாக தார் 700 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4x4 ரகத்தில் உருவாகி இருக்கும் தார் உண்மையான ஆஃப் ரோடிங் வசதிகளை கொண்டிருக்கிறது. 

தார் 700 எஸ்.யு.வி. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும். இது புதிதாக அக்வாமெரைன் நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர நபோளி பிளாக் நிற எடிஷனும் விற்பனை செய்யப்படுகிறது.



தார் 700 மாடலில் ஸ்டைலைஸ்டு 5-ஸ்போக் அலாய் வீல்கள், பக்கவாட்டு மற்றும் பொனெட்டில் டீக்கல்கள், பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில், முன்புற பம்ப்பரில் சில்வர் ஃபினிஷ், உள்புறம் லெதர் இருக்கைகள், முன்புற இருக்கைகளில் தார் லோகோ மற்றும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் தார் எஸ்.யு.வி. மாடல் ஆஃப் ரோடு பிரியர்கள் மட்டுமின்றி, முன்னாள் ராணுவ வீரர்கள் அதிகம் பயன்படுத்தும் காராக இருக்கிறது. தார் சி.ஆர்.டி.இ. மாடல் பயனர் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்ய பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
Tags:    

Similar News