ஆட்டோமொபைல்

கியா செல்டோஸ் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு

Published On 2019-06-15 09:41 GMT   |   Update On 2019-06-15 09:41 GMT
கியா மோட்டார் நிறுவனத்தின் செல்டோஸ் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.



கியா மோட்டார் நிறுவனம் தனது செல்டாஸ் காருக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய செல்டோஸ் கார் இந்தியாவில் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய டீசரில் செல்டோஸ் காரின் சில விவரங்கள் வெளியாகியுள்ளது.

டீசர் வீடியோவின் படி புத்தம் புதிய செல்டோஸ் காரில் ஹெட்லேம்ப், கிரில், ரியர் டோர் ஹேண்டிள் மற்றும் டெயில் லேம்ப் உள்ளிட்டவை காணப்படுகிறது. இதன் மெல்லிய ஹெட்லேம்ப்கள் கிரில்லின் மேல் பொருத்தப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் யூனிட்டில் இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதன் இன்டிகேட்டர்கள் ஹெட்லேம்ப் கிளஸ்டரின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. புதிய காரில் எல்.இ.டி. டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது. இது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. கியா செல்டோஸ் காரில் மிதக்கும் வகையிலான ரூஃப் வடிவமைப்பு, ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை காணப்படுகிறது.



புதிய செல்டோஸ் காரின் உள்புறம் உயர் ரக போஸ் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. கேபினில் பிளாக் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பின்புற ஏ.சி. வென்ட்களும் வழங்கப்படுகிறது. செல்டோஸ் காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பல்வேறு டிரைவிங் மோட்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் கியா செல்டோஸ் கார் பி.எஸ். VI ரக 1.5 லிடடர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் என்ஜினும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய கியா செல்டோஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ், ரெனால்ட் கேப்டுர் மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
Tags:    

Similar News