ஆட்டோமொபைல்

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார் அமெரிக்காவில் அறிமுகம்

Published On 2019-06-01 06:23 GMT   |   Update On 2019-06-01 06:23 GMT
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



அமெரிக்காவில் அலக்கா’ஐ டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. 

ஸ்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார், 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இந்த பறக்கும் கார் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 



6 சுழலிகளின் உதவியோடு, செங்குத்தாக மேலெழும்பி பறக்கும் திறன்படைத்த இந்த பறக்கும் கார், எந்த மாசுவையும் வெளிப்படுத்தாத, மாற்று எரிபொருட்களில் ஒன்றாக இருக்கும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக்கூடியதாகும். அண்மையில் கலிபோர்னியாவில் நடைபெற்ற விழாவில், இந்த ஸ்கை பறக்கும் காரை அலக்கா’ஐ டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

644 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் வல்லமை படைத்த இந்த ஸ்கை பறக்கும் கார், 454 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றும் இதனை வாடகை காராகவும், ஆம்புலன்சாகவும் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News