ஆட்டோமொபைல்

விரைவில் இந்தியா வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ பிளஸ்

Published On 2019-04-28 10:03 GMT   |   Update On 2019-04-28 10:03 GMT
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபல போலோ காரின் புதிய வேரியண்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Volkswagen



ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளில் மிகவும் பிரபல மாடலாக போலோ இருக்கிறது. தற்சமயம் சீன சந்தைக்கென போலோ பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஷாங்காய் சர்வதேச கண்காட்சியில் இந்த கார் இடம்பெற்றது. 

இந்த கார் சீனாவின் எஸ்.ஐ.ஏ.சி. ஃபோக்ஸ்வேகன் ஆலையில் தயாரிக்கப்பட்டதாகும். போலோ பிளஸ் மாடலானது இந்த நிறுவனத்தின் 6-வது தலைமுறை காராகும். இது முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக நீளம் கொண்டது. இது 4,053 மி.மீ நீளம், அகலம் 1,740 மி.மீ, உயரம் 1,449 மி.மீ. கொண்டது. இதன் சக்கரம் 2,564 மி.மீ. உடையது.



இது இரட்டை வண்ணத்தில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. இரண்டு எக்சாஸ்ட் பைப் கொண்டது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், ஸ்டீரிங் கண்ட்ரோல், ரியர் கேமரா, இ.எஸ்.பி., ஏர்பேக் மற்றும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம் உடையது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஆட்டோமேடிக் ஸ்பீடு கியர்களைக் கொண்டது. சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மாடல் கார்களை அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News