ஆட்டோமொபைல்

இந்தியாவில் 2019 பஜாஜ் டாமினர் 400 அறிமுகம்

Published On 2019-04-05 11:49 GMT   |   Update On 2019-04-05 11:49 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் 2019 டாமினர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Dominar400



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 டாமினர் 400 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2019 டாமினர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.1,74,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ.11,000 வரை அதிகம் ஆகும்.

2019 டாமினர் 400 மோட்டார்சைக்கிளில் 373.2சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை இந்த என்ஜின் 40 பி.எஸ். @8650 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய மாடலை விட 5 பி.எஸ். வரை அதிகம் ஆகும். செயல்திறனை அதிகப்படுத்த பஜாஜ் நிறுவனம் DOHC எனும் தொழிலநுட்பத்தை வழங்கியுள்ளது.



புதிய மோட்டார்சைக்கிளில் எக்சாஸ்ட் முந்தைய மாடலை விட வித்தியாசமாக இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று ஹெட்லேம்பின் மேல் மற்றொன்று பெட்ரோல் டேன்க் மேல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இவை விவரங்களை மிக அழகாக வரிசைப்படுத்துகின்றன.

இத்துடன் புதிய மோட்டார்சைக்கிளில் 43 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஃபோர்க கே.டி.எம். டியூக் 390 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிள் பி.எம்.டபுள்யூ. ஜி310ஆர் மற்றும் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர். 310 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

2019 பஜாஜ் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியுடன் அரோரா கிரீன் மற்றும் வைன் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News