ஆட்டோமொபைல்

இந்தியாவின் முதல் கனெக்டெட் கார் ஹூன்டாய் வென்யூ

Published On 2019-04-01 04:55 GMT   |   Update On 2019-04-01 04:55 GMT
இந்தியாவின் முதல் கனெக்டெட் கார் மாடலாக உருவாகும் ஹூன்டாய் வென்யூவில் பத்து அம்சங்கள் இந்தியாவுக்கென பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. #HyundaiVenue
ஹூன்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹூன்டாய் வென்யூ கார் இந்தியாவின் முதல் கனெக்டெட் கார் என்ற பெருமையை பெறுகிறது.

ஹூன்டாய் வென்யூ காரில் ஹூன்டாயின் புளுலின்க் கனெக்டெட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் புதிய காரில் இந்தியாவுக்கென பிரத்யேகமாக பத்து அம்சங்களை வழங்கும் என்றும் காரில் மொத்தம் 33 கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்திய மாடலில் வழங்கப்படும் அம்சங்களில் ஜியோ-ஃபென்சிங், ஸ்பீடு அலெர்ட், எஸ்.ஓ.எஸ்., பேனிக் நோட்டிபிகேஷன், டெஸ்டினேஷன் ஷேரிங், ரோட்-சைடு அசிஸ்டன்ஸ் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் புளுலின்க் தொழில்நுட்பம் மிகதீவிரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.



அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீராக இயங்கும் என தெரிகிறது. இதில் வாய்ஸ் கைடன்ஸ் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பில் மென்பொருள் தகவல்களை வழங்கும்.

ஹூன்டாய் வென்யூ காரில் ரிமோட் கன்ட்ரோல் முறையில் கிளைமேட் கண்ட்ரோல், ஹார்ன், ஹெட்லேம்ப்கள், வெஹிகிள் ஸ்டேட்டஸ், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் மற்றும் பல்வேறு வசதிகளை இயக்க முடியும். ஹூன்டாய் புளுலின்க் ஸ்மார்ட்போன் இன்டர்ஃபேசையே ரிமோட் கண்ட்ரோல் போன்று பயன்படுத்தும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கிறது.

ஹூன்டாய் புளுலின்க் மாடலில் டேம்பர்-ப்ரூஃப் இசிம் வசதி வழங்கப்படுகிறது. வோடபோன் ஐடியா மூலம் வழங்கப்படும் இசிம் கொண்டு கிளவுட் சார்ந்த குரல் அங்கீகார வசதியை பயன்படுத்த முடியும். இந்தியாவில் ஹூன்டாய் வென்யூ கார் ஏப்ரல் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.  #HyundaiVenue
Tags:    

Similar News