ஆட்டோமொபைல்

இந்தியாவில் அவான் டிரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2019-03-23 10:32 GMT   |   Update On 2019-03-23 10:32 GMT
அவான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. #ElectricScooter



பூனேவை சேர்ந்த அவான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. டிரெண்ட் இ என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. முதல் வேரியண்ட் ரூ.56,900 (எக்ஸ்-ஷோரூம்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அவான் டிரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒற்றை அல்லது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் இரண்டு பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் விலை ரூ.81,269 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு ஏற்கனவே துவங்கி, தற்சமயம் நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ரூ.1,100 ஆகும்.

டிரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அவான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது மாடல் ஆகும். முன்னதாக இந்நிறுவனம் சீரோ மற்றும் சீரோ பிளஸ் என இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்திருக்கிறது. மற்ற ஸ்கூட்டர்களை போன்றே அவான் டிரெண்ட் இ ஸ்கூட்டரிலும் 48 வோல்ட், 28Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டிருக்கிறது.



இந்த பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரண்டு பேட்டரி பேக் கொண்டிருக்கும் டிரெண்ட் இ ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டிரெண்ட் இ ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் இந்த பேட்டரிகளை 2 முதல் 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அவான் டிரெண்ட் இ ஸ்கூட்டர் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் காயில் ஸ்ப்ரிங்களை கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அவான் டிரெண்ட் இ ஸ்கூட்டர் சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News