ஆட்டோமொபைல்

2019 டாடா ஹெக்சா இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-03-01 11:33 GMT   |   Update On 2019-03-01 11:33 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 2019 ஹெக்சா எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #2019TataHexa



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2019 ஹெக்சா காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2019 டாடா ஹெக்சா எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ.12.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஹெக்சா எஸ்.யு.வி. மாடலின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது.

2019 ஹெக்சா எஸ்.யு.வி. பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. புதியா ஹெக்சாவின் XM, XMA மற்றும் XM+ வேரியண்ட்களில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி மற்றும் 10-ஸ்பீக்கர் ஹெ.பி.எல். சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாடா டியாகோ XZ+ மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய 2019 ஹெக்சாவின் XT, XTA மற்றும் XTA 4x4 மாடல்களில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம். இதன் உயர் ரக மாடல்களில் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது.



டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது என்றாலும் ஹெக்சா மாடல்: அர்பன் பிரான்ஸ், அரிசோனா புளு, ஸ்கை கிரே, டங்ஸ்டன் சில்வர் மற்றும் பியல் வைட் உள்ளிட்ட நிறங்களில் தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 டாடா ஹெக்சா மாடலின் டாப்-எண்ட் வேரியண்ட் 19-இனஅச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பேஸ் மற்றும் மிட்-ரேன்ஜ் மாடல்களில் 16-இன்ச் சார்கோல் கிரே அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2019 ஹெக்சாவின் உள்புறம் ஏ.சி. வென்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்களில் க்ரோம் சரவுண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பேஸ் வேரியன்ட் ஸ்டீரிங் வீல் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

2019 டாடா ஹெக்சா மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 156 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இதன் பேஸ் வேரியன்ட் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது 150 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது.
Tags:    

Similar News