ஆட்டோமொபைல்

டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-02-14 10:55 GMT   |   Update On 2019-02-14 10:55 GMT
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது. #ApacheRTR1604VFIABS #Motorcycle



டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் புதிய அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். விலை ரூ.98,644 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான RTR 160 4V FI மாடலை விட ரூ.6,999 அதிகம் ஆகும்.

பெருக்கு ஏற்றார்போல் புதிய மோட்டார்சைக்கிளில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், அபாச்சி RTR 160 4V கார்புரேட்டெட் வேரியண்ட் ஏ.பி.எஸ். மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.92,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

ஏ.பி.எஸ். வசதி கொண்ட அபாச்சி 160 4V மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 150-160 சிசி பிரிவில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக அபாச்சி RTR 160 சீரிஸ் இருக்கிறது. இந்நிலையில், புதிய வடிவமைப்பில் RTR 160 4V விற்பனையும் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்றே கூறலாம்.



டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V மாடலில் 159.7 சிசி ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 16.56 பி.ஹெச்.பி. மற்றும் 14.8 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது.

இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய விதிமுறை அமலாக இருப்பதால், டி.வி.எஸ். தனது புதிய மோட்டார்சைக்கிளில் ஏ.பி.எஸ். வசதியை வழங்கியிருக்கிறது.
Tags:    

Similar News