ஆட்டோமொபைல்

இந்தியாவில் 2019 ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2019-02-08 12:19 GMT   |   Update On 2019-02-08 12:19 GMT
ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது. #CB300R #Motorcycle



ஹோன்டா டூ-வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் CB300R மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2019 ஹோன்டா CB300R மாடல் CB1000R மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய CB300R மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என தெரிகிறது. புதிய CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்படுகிறது. 

புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. 



இத்துடன் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட் சேர்க்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை பின்புறம் மோனோஷாக் மற்றும் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க்கள் வழங்கப்பட்டிருக்கிறது. பிரேக்கிங் வழங்க இரு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
Tags:    

Similar News