ஆட்டோமொபைல்

புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் 2019 இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-01-29 11:02 GMT   |   Update On 2019-01-29 11:02 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் 2019 கார் இந்தியாவில் அறிமுகமானது. #Maruti #Baleno



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய பலேனோ 2019 ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் துவக்க விலை ரூ.5.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என துவங்கி ஆல்ஃபா டாப் எண்ட் மாடலின் விலை ரூ.8.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் கடந்த வாரம் துவங்கியது. இதற்கான கட்டணம் ரூ.11,000 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் விநியோகம் விரைவில் துவங்குகிறது. மேம்படுத்தப்பட்ட பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார்: சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கிறது.



நான்கு வேரியன்ட்களும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் கிடைக்கிறது. பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் DDis200 டீசல் யூனிட்கள் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் யூனிட் 89 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

டீசல் மோட்டார் 75 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறம் புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் ஃபீனிக்ஸ் ரெட் மற்றும் மேக்மா கிரெ என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர பியல் ஆர்க்டிக் வைட், பிரீமியம் சில்வர், நெக்சா புளு மற்றும் ஆட்டம் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களும் கிடைக்கிறது.



இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய கிரில் இன்சர்ட், மேம்பட்ட முன்பக்க பம்ப்பர், புதிய ஃபாக் லேம்ப், 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. உள்புறம் சீட்களுக்கு புதிய லெதர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகிறது.

2019 மாருதி பலேனோ கார் சீட்பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், அதிவேகமாக செல்லும்போது எச்சரிக்கை செய்யும் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஏ.பி.எஸ்., இ.பி.டி. உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. #Maruti #Baleno
Tags:    

Similar News