ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

அசத்தல் அம்சங்களுடன் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-08-21 11:09 GMT   |   Update On 2019-08-21 11:09 GMT
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.



கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்புகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது ஐ10 மாடலாகும். இந்த மாடலில் தயாரான கார்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற மாடலாகத் திகழ்கிறது. இந்த மாடலுக்கு உலகம் முழுவதும் சுமார் 27 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆஸ்டா விலை ரூ. 7.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து இதில் மூன்றாவது தலைமுறை மாடலை இந்நிறுவனம் கிராண்ட் ஐ 10 நியோஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. ஹேட்ச்பேக் மாடல் கார்களில் இது முன்னோடியாகத் திகழும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது.



முதலில் ஐ10 மாடலும், அதைத் தொடர்ந்து கிராண்ட் ஐ10 மாடலும் வந்தன. தற்போது மூன்றாவது தலைமுறை மாடலாக கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6 கண்கவர் வண்ணங்களில் (பியரி ரெட், போலார் ஒயிட், டைபூன் சில்வர், டைட்டன் கிரே, அக்வா டீல் மற்றும் ஆல்பா புளூ) வெளிவந்துள்ளது.

பி.எஸ்6. புகை விதிமுறைகளுக்கேற்ப இது தயாரிக்கப்பட்டுள்ளது. 83 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், டீசல் என்ஜின் மாடலும் வெளிவந்துள்ளன. 

இவை இரண்டிலுமே மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாற்றும் வசதி கொண்டது. இந்த மாடல் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News