ஆட்டோமொபைல்
ஹூன்டாய் கிராண்ட் ஐ10

ஹூன்டாய் கார் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்

Published On 2019-08-17 10:11 GMT   |   Update On 2019-08-17 10:11 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் மாடலின் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 விற்பனை நிறுத்தப்படமல், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடலுடன் சேர்த்தே விற்பனையாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஹூன்டாய் கிராண்ட் ஐ10 மூன்று வேரியண்ட்களில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தற்சமயம் விற்பனை செய்யப்படும் கிராண்ட் ஐ10 மாடல் சான்ட்ரோ மற்றும் நியாஸ் மாடல்களுக்கிடையே நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஹூன்டாய் கிராண்ட் ஐ10 டீசல் வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்துகிறது. அந்த வகையில், கிராண்ட் ஐ10 மாடல் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜினுடன் விற்பனை செய்யப்படும். 



எதிர்காலத்தில் இதன் பி.எஸ். 6 அப்கிரேடு மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வாங்க விரும்புவோருக்கு நியாஸ் மாடல் ஏற்றதாக இருக்கும். கிராண்ட் ஐ10 நியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

உபகரணங்களை பொருத்தவரை கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ் மாடலில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ORVMகள், பின்புற ஏ.சி. வென்ட்கள், பார்க்கிங் சென்சார்கள், கேமரா, டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. போன்றவை வழங்கப்படுகிறது.

ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் காரை இந்தியாவில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் முன்பதிவு செய்ய ரூ. 11,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News