ஆட்டோமொபைல்
கியா செல்டோஸ்

வெளியீட்டு முன் முன்பதிவில் அசத்தும் கியா செல்டோஸ்

Published On 2019-08-09 09:11 GMT   |   Update On 2019-08-09 09:11 GMT
இந்தியாவில் வெளியாகும் முன் கியா செல்டோஸ் கார் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.



கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறதரு. புதிய எஸ்.யு.வி. இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் செல்டோஸ் காரை வாங்க சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதில் முதல் நாளில் மட்டும் சுமார் 6000 பேர் முன்பதிவு செய்தனர். தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக செல்டோஸ் இருக்கிறது. புதிய செல்டோஸ் வெளியீட்டிற்கு 14 நாட்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் என எதிர்பார்க்கலாம்.



புதிய செல்டோஸ் காரை வாங்க கியா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ. 25,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். கியா செல்டோஸ் கார்: டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் மூன்று சப்-வேரியண்ட்களும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

கியா செல்டோஸ் கார் 115 பி.ஹெச்.பி. பவர், 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் என்.ஏ. பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஜி.டி.ஐ. என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

மூன்று என்ஜின்களும் ஸ்டான்டர்டு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இந்த எஸ்.யு.வி. மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள்: CVT, IVT மற்றும் DCT-களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Tags:    

Similar News