ஆட்டோமொபைல்
டாடா நெக்சான்

இந்தியாவில் டாடா நெக்சான் புதிய வேரியண்ட் அறிமுகம்

Published On 2019-08-07 09:04 GMT   |   Update On 2019-08-07 09:04 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது நெக்சான் காரின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது நெக்சான் காரை அப்டேட் செய்துள்ளது. டாடா நெக்சான் எக்ஸ்.டி. பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட். வேரியண்ட்கள் தற்சமயம் டி.ஆர்.எல்.-கள், ஃபாக் லேம்ப்களை கொண்டிருக்கின்றன. 

இத்துடன் எக்ஸ்.டி. பிளஸ் வேரியண்ட்டில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி, எட்டு ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நெக்சான் எக்ஸ்.டி. பிளஸ் மாடலில் கனெக்ட்நெக்ஸ்ட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அலாய் வீல் உள்ளிட்ட வசதிகள் இம்முறையும் வழங்கப்படவில்லை.

இரண்டு வேரியண்ட்களிலும் கிளைமேட் கண்ட்ரோல் அம்சங்களை பயனர் மாற்றிக் கொள்ளலாம். எனினும், எக்ஸ்.இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ. பிளஸ் மாடல்களில் இது தானியங்கி முறையில் செயல்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.



புதிய அப்கிரேடுகள் மூலம் நெக்சான் எக்ஸ்.டி. மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் விலை முறையே ரூ. 8.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 8.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா நெக்சான் எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ. பிளஸ் வேரியண்ட்களில் தொடர்ந்து கனெக்ட்நெக்ஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

புதிய 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடஎன் குரல்வழி அங்கீகார வசதி, நேவிகேஷன், போன் அழைப்புகள், மியூசிக் உள்ளிட்டவற்றை ஒரே க்ளிக் மூலம் வழங்குகிறது. குரல் கமாண்ட்களின் மூலம் குறுந்தகவல்களுக்கும் பதில் அளிக்க முடியும். 

டாடா நெக்சான் காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசர் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News