பைக்
ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

செமிகண்டக்டர் குறைபாடு - ஏப்ரல் டெலிவரி 0 - பெரும் சிக்கலில் ஹீரோ எலெக்ட்ரிக்

Update: 2022-04-30 08:03 GMT
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த மாதம் முழுக்க ஒரு யூனிட்டை கூட வினியோகம் செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


சர்வதேச செமிகண்டக்டர் குறைபாடு பிரச்சினையில் உள்நாட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஹீகரோ எலெக்ட்ரிக் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் 2022 மாதம் முழுக்க இந்தியாவில் ஒரு யூனிட் கூட வினியோகம் செய்யப்படவில்லை என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

மேலும் தனது இருசக்கர வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் 60 நாட்களாக அதிகரித்து உள்ளது என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளது. சில விற்பனை மையங்களில் காட்சிக்கு வைக்க கூட ஒரு யூனிட் இல்லை என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் ஹீரோ எலெக்ட்ரிக் முன்னணி நிறுவனமாக உள்ளது. எனினும், தற்போது செமி கண்டக்டர் குறைபாட்டு பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. 

"எங்களின் மாதாந்திர விற்பனை ஒவ்வொரு மாதமும் இருமடங்கு வரை அதிகரித்து வந்தது. எப்படியோ பல்வேறு பகுதிகளில் இருந்து உதிரிபாகங்களை இந்தியா கொண்டு வந்து கொண்டிருந்தோம். எனினும், போர் சூழல் காரணமாக தற்போது இதிலும் இடையூறு ஏற்பட்டு விட்டது. இந்த காலக்கட்டத்தை பயன்படுத்திக் கொண்டு எங்களின் ஆலையில், உற்பத்தியை அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க போகிறோம்." என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி சொஹிந்தர் கில் தெரிவித்து இருக்கிறார்.  
Tags:    

Similar News