ஆட்டோமொபைல்
டிவிஎஸ் ஜூப்பிட்டர்

புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமான டிவிஎஸ் ஜூப்பிட்டர்

Published On 2021-02-03 07:41 GMT   |   Update On 2021-02-03 07:41 GMT
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 110சிசி ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் தற்சமயம் இன்டெலிகோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது காற்று மாசை குறைப்பதோடு, எரிபொருள் சேமிக்கவும் உதவும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

புதிய இன்டெலிகோ தொழில்நுட்பம் ஜூப்பிட்டர் டாப் எண்ட் மாடலான இசட்எக்ஸ் டிஸ்க் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய வேரியண்ட் விலை ரூ. 72,347 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஸ்டிரெயிட் புளூ மற்றும் ராயல் வைன் நிறங்களில் கிடைக்கிறது.



இன்டெலிகோ தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசல் சமயங்களில் நீண்ட நேரம் என்ஜின் இயங்கும் சூழலில் என்ஜினை தானாக ஆப் செய்துவிடும். பின் மீண்டும் ஸ்டார்ட் செய்ய திராட்டிள் செய்தாலே போதுமானது. இதுபோன்ற அம்சம் பெற்ற முதல் டிவிஎஸ் வாகனமாக ஜூப்பிட்டர் இருக்கிறது.

புதிய தொழில்நுட்பம் தவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த ஸ்கூட்டரில் அதே என்ஜின், மெக்கானிக்கல் அம்சங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடலில் 110சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 7.3 பிஹெச்பி பவர், 8.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 220எம்எம் டிஸ்க், பின்புறம் 130எம்எம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News