ஆட்டோமொபைல்
ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இருவித பயன்பாடுகளை வழங்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2021-01-23 08:52 GMT   |   Update On 2021-01-23 08:52 GMT
ஒகினாவா பிராண்டின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஒகினவா இந்தியாவில் புதிய ஸ்கூட்டரை டூயல் எனும் பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒகினவா டூயல் மாடல் விலை ரூ. 58,998 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் சுமைதாங்கும் வசதியுடன் கிடைக்கிறது. 

இதன் முன்புறம் மற்றும் பின்புறங்களில் அதிக எடை கொண்ட பொருட்களை வைத்து பயணிக்கும் வகையிலான கேரியர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர டெலிவரி பெட்டி, அடுக்குகள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவைகளையும் ஒகினவா கூடுதல் அக்சஸரீயாக வழங்குகிறது.



மேலும் இதன் பக்கவாட்டுகளில் பூட்ரெஸ்ட், மேட் டிசைன், போன் வைக்கும் ஸ்டாண்டு, சார்ஜிங் போர்ட் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஒகினவா டூயல் 250வாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும்.

இந்த ஸ்கூட்டரை வாங்குவோர் 48V 28Ah பேட்டரியை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இது 45 நிமிடங்களில் 80 சதவீதமும், மூன்று மணி நேரத்தில் முழுமையாகவும் சார்ஜ் ஆகிறது. இதன் சிறிய பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

ஒகினவா டூயல் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பயர் ரெட் மற்றும் சன்ஷைன் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News