ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்

இந்தியாவில் பிஎம்டபிள்யூ ஜி 310 சீரிஸ் விலையில் திடீர் மாற்றம்

Published On 2021-01-22 09:37 GMT   |   Update On 2021-01-22 09:37 GMT
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்கள் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. 

விலை உயர்வின் படி பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மாடல் தற்சமயம் ரூ. 2.50 லட்சம் என்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மாடல் ரூ. 2.90 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமான மூன்றே மாதங்களில் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.



இரு பிஎம்டபிள்யூ மாடல்களிலும் பிஎஸ்6 ரக 312சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் கேடிஎம் 390 டியூக் மாடலுக்கும் ஜி 310 ஜிஎஸ் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கும் போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News