ஆட்டோமொபைல்
2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்125

இரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான சுசுகி மோட்டார்சைக்கிள்

Published On 2021-01-18 06:32 GMT   |   Update On 2021-01-18 06:32 GMT
சுசுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


சுசுகி நிறுவனம் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மோட்டார்சைக்கிள் மாடலை ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நேக்கட் ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மாடல் டிரைடன் புளூ மெட்டாலிக் மற்றும் டைட்டன் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், 4-வால்வு DOHC லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 



இந்த என்ஜின் 14.8 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மற்றும் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின் இதே செயல்திறன் வழங்கி வருகின்றன.

புதிய சுசுகி மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News