கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மைனர் அப்டேட்களுடன் 2021 கவாசகி இசட்650 அறிமுகம்
பதிவு: ஜனவரி 07, 2021 15:58
2021 கவாசகி இசட்650
கவாசகி நிறுவனம் 2021 இசட்650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் நிறம் மட்டும் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மாடல் மெட்டாலிக் ஸ்பார்க் பெயின்டிங் மற்றும் ரிம்களில் புளோரசன்ட் கிரீன் நிறம் பூசப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 2021 இசட்650 மாடல் துவக்க விலை ரூ. 6,04,000, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் புல் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், அன்டர்பெல்லி எக்சாஸ்ட், ப்ளூடூத் சார்ந்த 4.3 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன், பெட்டல் டைப் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல் 649சிசி, இன்லைன் 2-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜின் 67.3 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Related Tags :