ஆட்டோமொபைல்
பஜாஜ் பல்சர் 125

இரெண்டு மாதங்களில் 40,000 யூனிட்கள் - விற்பனையில் அசத்தும் பல்சர் மோட்டார்சைக்கிள்

Published On 2019-10-24 10:19 GMT   |   Update On 2019-10-24 10:19 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 மோட்டார்சைக்கிள் விற்பனை துவங்கிய இரண்டு மாதங்களில் 40,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 125 மோட்டார்சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய பஜாஜ் பல்சர் 125 விற்பனை துவங்கிய இரண்டு மாதங்களில் 40,000 யூனிட்களை கடந்திருக்கிறது.

பஜாஜ் பல்சர் 125 மோட்டார்சைக்கிள் விற்பனை இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் துவங்கியது. பஜாஜ் என்ட்ரி லெவல் மாடல் டிரம் மற்றும் டிஸ்க் என இருவிக வேரியண்ட்களில் கிடைக்கிறது. பஜாஜ் பல்சர் 125 துவக்க விலை ரூ. 64,000 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 66,618 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



பஜாஜ் பல்சர் 125 நியான் மாடலில் 124சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 11.8 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம் மற்றும் 11 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் தனது பிரபல செட்டாக் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அர்பனைட் பிராண்டிங்கில் அறிமுகமான செட்டாக் ஸ்கூட்டர் பல்வேறு அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News