ஆட்டோமொபைல்
டியூக் 790

பத்து நாட்களில் இத்தனை யூனிட்களா? முன்பதிவில் அசத்தும் டியூக் 790

Published On 2019-10-17 08:25 GMT   |   Update On 2019-10-17 08:25 GMT
கே.டி.எம். நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த டியூக் 790 மோட்டார்சைக்கிள் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



ஆஸ்த்ரிய நாட்டு மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். இந்திய சந்தையில் அதற்குள் 41 டியூக் 790 யூனிட்களை விற்பனை செய்துவிட்டது. கே.டி.எம். நிறுவனம் முதற்கட்டமாக 100 டியூக் 790 மாடல்களை இந்தியாவில் இறக்குமதி செய்திருந்தது.

இந்தியாவில் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட டியூக் 790 மாடல் விலை ரூ. 8.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டியூக் 790 மாடல் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டுவரப்பட்டு பஜாஜ் நிறுவன ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.

டியூக் 790 மாடல் இந்தியாவில் சுசுகி ஜி.எஸ்.எக்ஸ். எஸ்750, டுகாடி மான்ஸ்டர் 797, டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில், யமஹா எம்.டி. 09 மற்றும் கவாசகி இசட்900 மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது. போட்டி நிறுவன மாடல்களை விட விலை அதிகமாக நிர்ணிக்கப்பட்டுள்ள போதிலும் டியூக் 790 மாடல் பத்தே நாட்களில் 41 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



டியூக் 790 மாடலில் 799சிசி லிக்விட் கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 104 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம். மற்றும் 87 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்: ரெயின், ஸ்டிரீட், ஸ்போர்ட்ஸ் மற்றும் டிராக் என நான்கு வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் எலெக்டிரானிக் ஏய்டுகள் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது. கே.டி.எம். டியூக் 790 மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், லீன் ஆங்கில் சென்சிடிவிட்டி, மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் டு-வே ஷிஃப்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

மற்ற அம்சங்களை பொருத்தவரை கே.டி.எம். டியூக் 790 மாடலில் டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லான்ச் கண்ட்ரோல் மற்றும் வீலி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News