ஆட்டோமொபைல்
கே.டி.எம். 390 அட்வென்ச்சர்

கே.டி.எம். 390 அட்வென்ச்சர் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-10-09 09:48 GMT   |   Update On 2019-10-09 09:48 GMT
கே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியீட்டிற்கு முன் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மிலானில் நடைபெறும் சர்வதேச விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்நிகழ்வு நவம்பர் 5 ஆம் தேதி துவங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கே.டி.எம். நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. 

முன்னதாக பலமுறை இந்த மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. புதிய அட்வென்ச்சர் மாடலின் வடிவமைப்பு 390 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.



390 அட்வென்ச்சர் மாடலில் 373.2 சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் 390 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 42.9 பி.ஹெச்.பி. பவர், 37 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமானதும் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் வெர்சிஸ் 300, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் பி.எம்.டபுள்யூ. ஜி310 ஜி.எஸ். போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News