ஆட்டோமொபைல்
யமஹா எம்.டி. 15

ஆறு மாதங்களில் இத்தனை யூனிட்களா? விற்பனையில் அசத்தும் யமஹா எம்.டி. 15

Published On 2019-09-23 06:33 GMT   |   Update On 2019-09-23 06:33 GMT
யமஹா நிறுவனத்தின் எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருக்கிறது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.



யமஹா நிறுவனத்தின் எம்.டி. 15 மாடல் விற்பனையில் 15,000 யூனிட்களை முதல் ஆறு மாதங்களில் கடந்திருக்கிறது. இந்தியாவில் யமஹா எம்.டி. 15 விற்பனை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கியது. அன்று முதல் யமஹா எம்.டி. 15 மாடல் இதுவரை சுமார் 15,298 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

யமஹா எம்.டி. 15 விலை இந்தியாவில் ரூ. 1.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யமஹா எம்.டி. 15 இந்திய விற்பனை துவங்கிய முதல் மாதத்திலேயே 5000 யூனிட்கள் விற்பனையானது. பின் ஆட்டோ துறையில் ஏற்பட்ட சரிவு காரணமாக இதன் விற்பனையும் கடந்த சில மாதங்களில் குறைய துவங்கியது.

யமஹா எம்.டி.15 வடிவமைப்பு வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் ஹெட்லேம்ப் கிளஸ்டரில் டூயல் எல்.இ.டி. செட்டப் மற்றும் இரண்டு எல்.இ.டி. யூனிட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் யமஹா எம்.டி. 15 சர்வதேச சந்தையில் கிடைக்கும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.



முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் ஃபியூயல் டேன்க் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. இத்துடன் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்விங்ஆம் வழங்கப்பட்டிருக்கிறது. யமஹா ஆர்15 வெர்ஷன் 3 மாடலில் அலுமினியம் ஸ்விங்-ஆம் வழங்கப்பட்டிருக்கிறது.

யமஹா எம்.டி. 15 மாடலில் லிக்விட்-கூல்டு, 155சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வேரியபிள் வால் டைமிங்குடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதே என்ஜின் யமஹா ஆர்15 மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த என்ஜின் 19.3 பி.ஹெச்.பி. பவர், 14.7 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் உடன் வருகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் இ.சி.யு. மேப்பிங் மாற்றப்பட்டிருக்கிறது. ஆர்15 மாடலில் 48டி ஸ்பிராகெட் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எம்.டி. 15 மாடலில் 52டி பின்புற ஸ்பிராகெட் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News