ஆட்டோமொபைல்
அப்ரிலியா 150சிசி மோட்டார்சைக்கிள்

அப்ரிலியாவின் 150சிசி மோட்டார்சைக்கிள் - இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-09-17 08:06 GMT   |   Update On 2019-09-17 08:06 GMT
அப்ரிலியா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிதாக 150சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



அப்ரிலியா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிதாக 150சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 150சிசி  மோட்டார்சைக்கிள் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் போது விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் 150சிசி அப்ரிலியா மோட்டார்சைக்கிள் மாடலுக்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ஆர்.எஸ். 150 அல்லது டியூனோ 150 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அப்ரிலியாவின் இரு மாடல்களும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.



இரு மாடல்களும் ஏற்கனவே இவை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாட்டு சந்தைகளில் அதிக அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டிருக்கும் புதிய அப்ரிலியா மோட்டார்சைக்கிள், இந்தியாவில் சில அம்சங்கள் நீக்கப்பட்டே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் டியூனோ 150 மாடல்கள் 149சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 17.7 பி.ஹெச்.பி. பவர் 14 என்.எம். டார்க் செயல்திறன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் மற்றும் பின்புறத்தில் 300 எம்.எம். மற்றும் 218 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் இரு மோட்டார்சைக்கிள்களிலும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், அப்ரிலியாவின் மூன்று ஹெட்லேம்ப் வடிவமைப்பு, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News