ஆட்டோமொபைல்
ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2019-08-27 07:52 GMT   |   Update On 2019-08-27 07:52 GMT
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் புதிதாக டேஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புத்தம் புதிய ஹீரோ டேஷ் எலெக்ட்ரிக் விலை ரூ. 62,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

புதிய டேஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 48 வோல்ட் 28Ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் பேட்டரியை நான்கு மணி நேரத்தில் 0-100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிடும். ஹீரோ டேஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக சுலபமாக பயன்படுத்தும் வகையில், அதிக தரமுள்ள பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய சாலைகளுக்கு ஏற்ப இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 145 எம்.எம். அளவில் இருக்கிறது.



இத்துடன் புதிய டேஷ் ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டியூப்லெஸ் டையர்கள், டூயல்-டோன் பெயின்ட் மற்றும் கவர்ச்சிகர கிராஃபிக்ஸ், ரிமோட் பூட் ஒப்பனிங், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய டேஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தவிர ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இ.ஆர். வாகனங்களையும் காட்சிப்படுத்தியது. இதில் ஆப்டிமா இ.ஆர். மற்றும் நிக்ஸ் இ.ஆர். ஸ்கூட்டர்கள் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. இருவாகனங்களும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. 
Tags:    

Similar News