ஆட்டோமொபைல்
ஹோன்டா சி.பி.150 எம்.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹோன்டா சி.பி.150 எம்.

Published On 2019-08-25 08:33 GMT   |   Update On 2019-08-25 08:33 GMT
ஹோன்டா நிறுவனம் விரைவில் சி.பி.150எம் என்ற பெயரில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஹோன்டா நிறுவனம் சர்வதேச ஜப்பானிய மோட்டார்சைக்கிள் (யு.ஜே.எம்.) தயாரிப்பு அடிப்படையில் ஹோன்டா சி.பி.150எம் என்ற அதிநவீன மோட்டார்சைக்கிளை தயாரித்துள்ளது. 

சாகச பயணங்களுக்கேற்ப இந்த மோட்டார்சைக்கிள் யமஹா நிறுவனத்தின் தயாரிப்பான எம்.டி 15 டிரேசர் மாடலுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. சி.பி.150எம். என்ற பெயரில் தாய்லாந்தில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சி.பி. 150 ஆர். ஸ்ட்ரீட்ஸ்டெர் மாடலை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மோட்டார்சைக்கிளில் மேலிருந்து கீழாக வடிவமைக்கப்பட்டுள்ள 41 மி.மீ. போர்க், நீண்ட தூர பயணத்துக்கு மிகவும் ஏற்றது. பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. இது அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலானது. அனைத்துக்கும் மேலாக இதன் ஹேண்டில்பார் ஓட்டுநரின் வசதிக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் இருக்கிறது.



இந்த மாடல் மோட்டார்சைக்கிளை ஹோன்டா நிறுவனத்தின் இத்தாலிய ஆராய்ச்சி, வடிவமைப்பு பிரிவு உருவாக்கியுள்ளது. இது 149 சி.சி. என்ஜின் உள்ளது. நிறுவனத்தின் DOHC லிக்விட் கூல்டு என்ஜின் 17.1 பி.எஸ். திறன் 14.4 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் கொண்டது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. இளைஞர்களை வெகுவாகக் கவரும் இந்த மோட்டார்சைக்கிள் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News