ஆட்டோமொபைல்
ஹார்லி டேவிட்சன் லைவ் வையர் டீசர்

ஹார்லியின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியீடு

Published On 2019-08-22 08:04 GMT   |   Update On 2019-08-22 08:04 GMT
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் லைவ் வையர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



ஹார்லி டேவிட்சன் லைவ் வையர் மோட்டார்சைக்கிள் டீசர் லைவ் வையர் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதில் புதிய மோட்டார்சைக்கிள் 27.08.2019 அன்று அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்யும் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக லைவ் வையர் இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் லைவ் வையர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகமான லைவ் வையர் இந்திய விலை ரூ. 19 முதல் ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படலாம்.

லைவ் வையர் மாடல் முன்புறம் செல்ல பெல்ட் டிரைவ் முறையை பின்பற்றுகிறது. இதுதவிர புதிய எலெக்ட்ரிக் பைக் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது. ஹெச்.டி. கனெக்ட் என அழைக்கப்படும் ஸ்மார்ட் டெலிமேடிக்ஸ் சிஸ்டம் மோட்டார்சைக்கிளின் பேட்டரி சார்ஜ் விவரங்களை சேகரித்து ஹார்லியின் கனெக்ட்டெட் ஆப் மூலம் பயனருக்கு வழங்கும்.



செல்லுலார் இணைப்பு பெற்ற முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக லைவ் வையர் இருக்கும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நம்புகிறது. புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டும் என ஹார்லி தெரிவித்துள்ளது. 

இந்த மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 177 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரைடு அசிஸ்ட், டிராக்‌ஷன் கண்ட்ரோல்,  ஏ.பி.எஸ்., இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News