ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350எக்ஸ் இ.எஸ்.

இந்தியாவில் விலை குறைந்த புல்லட் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2019-08-10 09:02 GMT   |   Update On 2019-08-10 09:02 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை புல்லட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2019 புல்லட் 350எக்ஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350எக்ஸ்: 350எக்ஸ் ஸ்டான்டர்டு மற்றும் 350எக்ஸ் இ.எஸ். என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 1.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய புல்லட் 350எக்ஸ் மற்றும் 350எக்ஸ் இ.எஸ். மாடல் ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது. காஸ்மெடிக் மாற்றங்களின் படி வைப்ரண்ட் பெயின்ட், ராயல் என்ஃபீல்டு லோகோ மற்றும் பிளாக்டு-அவுட் ஃபிட்மென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.



ராயல் என்ஃபீல்டு புல்லட் 350எக்ஸ்: புல்லட் சில்வர், சஃபையர் புளு மற்றும் ஆனிக்ஸ் பிளாக் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதேபோன்று புல்லட் 350எக்ஸ் இ.எஸ். மாடலும் ரீகல் ரெட், ராயல் புளு மற்றும் ஜெட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

இதுதவிர இரு மாடல்களிலும் 246சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பி.எஸ். 4 புகை விதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 
Tags:    

Similar News